Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பீகாரில் சட்டவிரோத மது விற்பனை.. ரெய்டுக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த பொதுமக்கள்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2025
in அரசியல் செய்திகள்
0
பீகாரில் சட்டவிரோத மது விற்பனை.. ரெய்டுக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த பொதுமக்கள்! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 10, 2025 11:46 AM IST

பெண்கள் உட்பட அனைவரும் தடியை எடுத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், அவர்களிடம் சிக்கிய போலீசார் கையெடுத்துக் கும்பிட்டு உயிர் தப்பினர்.

Rapid Read
போலீசாரை தாக்கிய மக்கள்போலீசாரை தாக்கிய மக்கள்
போலீசாரை தாக்கிய மக்கள்

பீகாரில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கச் சென்ற போலீசாரை, கிராம மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான முந்தைய அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டும் பூரண மதுவிலக்கை அமல்படத்தியது. இதையடுத்து மது புழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டதும் மது பிரியர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று மது வாங்கி குடிப்பது அதிகரித்துள்ளது. அதிலும், சில பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதை கட்டுப்படுத்த போலீசார் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜமுய் மாவட்டத்தில் கடுத்ரி கிராமத்தில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பதுடன், சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே, அங்கு துப்பாக்கியுடன் சென்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் சாராயக் கும்பல் சத்தம் எழுப்பியுள்ளது. அடுத்த நிமிடமே பெண்கள், சிறுவர்கள் என ஒட்டுமொத்த கிராமமும் போலீசாரை நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர்.

போலீசாரை கண்டதும் சாராயக் கும்பல் தலைதெறிக்க ஓடுவார்கள் என்று பார்த்தால், கிராம மக்கள் போலீசாரை துண்டைக் காணோம் துணியக் காணோம் என ஓடவைத்துள்ளனர். அப்போது, தான் கிராம மக்களின் ஆதரவுடன் மதுபான விற்பனை நடைபெறுவது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பெண்கள் உட்பட அனைவரும் தடியை எடுத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், அவர்களிடம் சிக்கிய போலீசார் கையெடுத்துக் கும்பிட்டு உயிர் தப்பினர்.

மேலும் ஒரு சிலர் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு பெண் காவலர் உட்பட நான்கு போலீசார் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறு பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சாராயம் மற்றும் மதுபான விற்பனையை தடுக்க துப்பாக்கியுடன் சென்ற போலீசாரை, கிராம மக்கள் தடியால் அடித்து விரட்டிய சம்பவம் பீகாரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 10, 2025 11:46 AM IST



.

Previous Post

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

Next Post

நடிகர் கதிரின் மீஷா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடிகர் கதிரின் மீஷா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் கதிரின் மீஷா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In