Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ADMK: "கட்சிப் பொறுப்புகளிலிருந்து என்னை நீக்கியது எனக்கு மகிழ்ச்சிதான்" – செங்கோட்டையன் பளீச் பதில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 7, 2025
in அரசியல் செய்திகள்
0
ADMK: "கட்சிப் பொறுப்புகளிலிருந்து என்னை நீக்கியது எனக்கு மகிழ்ச்சிதான்" – செங்கோட்டையன் பளீச் பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும்.

அதிமுக ஒருங்கிணைப்பு என்பது இந்த நேரத்தில் முக்கியம். அதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பம். 10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அதிமுக-வை ஒன்றிணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக இறங்கி வெற்றிக்காகப் பணியாற்றுவேன்.

இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, இன்று செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும், அத்துடன் அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தினேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்தைக் கூறினேன்.

கட்சிப் பொறுப்புகளிலிருந்து என்னை நீக்கியதற்கு வருத்தம் இல்லை. எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு’- செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

Next Post

தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?

தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In