முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார்.
எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையேயான உரசல் மீண்டும் புகைய தொடங்கியிருக்கிறது. செங்கோட்டையன் அதிமுக-வின் சூப்பர் சீனியர். எம்.ஜி.ஆர் காலத்து ரத்தத்தின் ரத்தம். அவரின் வெடிப்பை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

யார் இந்த செங்கோட்டையன்?
1971 வரை திமுக-வில் இருந்த செங்கோட்டையன், 1972-ல் எம்.ஜி.ஆர் தலைமையில் ஆன அதிமுக-வில் இணைந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான இவர் கட்சியில் இணையும்போதே எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய மாவட்டதிற்கு உட்பட்ட தொகுதிகளில் கட்சி ரீதியிலான செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆரின் கவனத்தை ஈர்த்து நற்பெயரைப் பெற்றிருக்கிறார்.
