கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி அறிவித்த ‘தீபாவளி கிஃப்ட்’ நேற்று வெளிவந்துவிட்டது.
ஆம்… ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால் எந்தெந்தப் பொருள்களுக்கு வரிச் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாக குறைக்கப்படும் பொருள்கள்:
ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட பொருட்கள்
-
தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பூ, டூத் பேஸ்ட், டாய்லெட் சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம்
-
வெண்ணெய், நெய், பன்னீர் மற்றும் பால் பொருட்கள்
-
மிக்சர் வகைகள்
-
பாத்திரங்கள்
-
பால் புட்டி, குழந்தைகளுக்கான நேப்கின், கிளினிக்கல் டயப்பர்
-
தையல் இயந்திரங்கள்
விவசாயம் சார்ந்த பொருட்கள்
-
டிராக்டர், டிராக்டர் டயர்கள்
-
குறிப்பிட்ட உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்
-
சொட்டு நீர்பாசன அமைப்பு மற்றும் தெளிப்பான் கருவிகள்
-
மண் தயாரிப்பு, சாகுபடி, அறுவடை மற்றும் கதிரடிக்கும் விவசாய, தோட்டக்கலை அல்லது வனவியல் இயந்திரங்கள்
