2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் “அதிமுக’ வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்காமல் ‘அதிமுக’வில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தீவிரமாகத் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்.
இதற்கிடையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித முக்கியப் பதவியும் இல்லாமல் இருந்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என வரும் டிசம்பர் மாதம் அறிவிப்பேன். துரோகம் தலைவிரித்து ஆடுகின்றது எனவும் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

