Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிஸியாக இருந்த காதலியின் செல்போன்.. கிராமத்தையே பழிவாங்கிய காதலன்.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2025
in அரசியல் செய்திகள்
0
பிஸியாக இருந்த காதலியின் செல்போன்.. கிராமத்தையே பழிவாங்கிய காதலன்.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 02, 2025 6:10 PM IST

வழக்கம் போல், தனது காதலிக்கு போன் செய்துள்ளார்.  ஒன்றுக்கு பலமுறை கால் செய்தபோதும், அவர் எடுக்காமல் இருந்துள்ளார். 

Rapid Read
மின்வயரை துண்டிக்கும் இளைஞர்மின்வயரை துண்டிக்கும் இளைஞர்
மின்வயரை துண்டிக்கும் இளைஞர்

பீகாரில் காதலி மீதான கோபத்தில் அவரது கிராமத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து இளைஞர் ஒருவர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பக்கத்து ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள், இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் அளவளாவியுள்ளனர். இந்த சூழலில் வழக்கம் போல், தனது காதலிக்கு போன் செய்துள்ளார்.  ஒன்றுக்கு பலமுறை கால் செய்தபோதும், அவர் எடுக்காமல் இருந்துள்ளார். அதேவேளையில், காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர், வில்லங்கமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

திடீரென காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின் வழித்தடத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறியுள்ளார். ஏதே விபரீத முடிவு எடுக்கப் போகிறாரோ என்று அங்கிருந்தவர்கள் அஞ்சியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர் இடுப்பில் பாதுகாப்பாக கயிறு கட்டி, கையில் கட்டிங் பிளேடை எடுத்துக் கொண்டு மின் கம்பத்தில் ஏறியுள்ளார். மேலே ஏறியவர் அங்கிருந்த மின் கம்பிகளை ஒவ்வொன்றாக துண்டித்துள்ளார்.

அப்போது தான், தனது காதலியின் செல்போன் நீண்ட நேரம் பிஸியாக இருந்த ஆத்திரத்தில், அவரது கிராமத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தது தெரியவந்தது. கரண்ட் இருந்தால் தானே சார்ஜ் போட்டு காதலி யாரிடமாவது பேசுவார் என்ற நினைப்பில், ஒட்டு மொத்த கிராமத்தையும் பழிவாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

காதலி மீது கொண்ட கோபத்தில் ஒரு ஊரையே இருளில் தள்ளிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க மின்வாரியம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், காதலியை பழிவாங்க கரண்ட் கம்பியில் கை வைத்த இளைஞரை, போலீசார் கைது செய்து ஷாக் கொடுக்க ஆயத்தமாகியுள்ளனர். காதலிக்காக கரண்டை கட் செய்வது பீகாரில் இது ஒன்றும் புதுசு அல்ல என்று அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு பூர்ணிமா மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் கிராமத்தில், நாள்தோறும் இரவில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காரணமே இன்றி நாள்தோறும் எப்படி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்று மின்வாரிய ஊழியர்களை குழம்பிபோயுள்ளனர். விசாரணையில், இளைஞர் ஒருவர் தனது காதலியை யாருக்கும் தெரியாமல் பார்க்க செல்வதற்காக இரவில் மின்சாரத்தை துண்டித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று, தற்போது காதலியின் செல்போன் பிஸியாக இருந்ததால், இளைஞர் ஒருவர் ஒரு கிராமத்தையே இருளில் தள்ளியது பேசுபொருளாகியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 02, 2025 6:10 PM IST



.

Previous Post

விளம்பரதாரா்களை வரவேற்கிறது பிசிசிஐ

Next Post

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In