மராத்தா போராட்டத்தைத் தொடர்ந்து மும்பையில் அனைத்து போலீஸாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து போலீஸாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் விடுமுறையில் உள்ள போலீஸார் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையின் ஆசாத் மைதானத்தில் நேற்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளார். உரிய இடஒதுக்கீட்டை அரசு வழங்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
