ஏன் இங்கே முதலீடு செய்ய முடியவில்லை?
இந்தியாவில் முதலீடு செய்ய முடியாததற்கு காரணம், இங்கே இருக்கும் கெடுபிடியான சட்டத்திட்டங்கள் ஆகும்.
இந்தச் சட்டத்திட்டங்களைத் தாண்டி, முதலீடுகளைச் செய்ய அதிக காலம் பிடிக்கிறது. அதுவரை முதலீட்டாளர்கள் காத்திருக்கமாட்டார்கள்.
இதில் இன்னொரு முக்கிய காரணம், அரசாங்கத்தின் சட்டத்திட்டங்கள் ஒருசிலருக்கு தான் சாதகமாக இருக்கிறது. மற்றவர்கள் இதனால் பலனடைய முடிவதில்லை. அதனால், அவர்கள் வேறு நாடுகளைத் தேடி செல்கின்றனர்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால், ரிலையன்ஸ் குழுமம் மட்டுமே பெரும்பாலும் பலனடைகிறது.
விமான நிலையம் நிறுவ ஏலம் விடப்பட வேண்டும். ஆனால், நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்கப்படுகிறது.
இவை இரண்டும் மேலே கூறியதற்கு சின்ன சான்றுகள் தான். அதனால், பிற முதலீட்டாளர்கள் வேறு நாடுகளைத் தேடி செல்கின்றனர்.

முதலீடுகள் குறையும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு தானாக சரியும். விளைவு, விலைவாசி உயர்வு மிகவும் அதிகரிக்கும்.
இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் இதே நேரத்தில், மற்ற நாடுகளின் நாணயத்தின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே தான் வருகிறது. அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இப்படி எல்லா பக்கமும் பிரச்னை இருக்கும்போது, இந்தச் சரிவை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
