Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரீல்ஸ் எடுக்கச் சென்ற யூடியூபருக்கு நேர்ந்த சோகம்… நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற வீடியோ வைரல்…! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 26, 2025
in அரசியல் செய்திகள்
0
ரீல்ஸ் எடுக்கச் சென்ற யூடியூபருக்கு நேர்ந்த சோகம்… நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற வீடியோ வைரல்…! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 26, 2025 10:22 PM IST

லாம்டாபுட் பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக மக்காகுண்டா அணையில் இருந்து தோராயமாக 2,000 கன அடி நீரை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். மேலும், இது குறித்து அங்கு வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Rapid Read
News18News18
News18

பெர்ஹாம்பூரைச் சேர்ந்த 22 வயதான சாகர் என்ற யூடியூபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் டுடுமா நீர்வீழ்ச்சியில் அவர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாகர் கட்டாக்கில் இருந்து தன்னுடைய நண்பர் அபிஜித் பெஹராவுடன் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு சுற்றுலா தலங்களை படம் பிடிப்பதற்காக கோராபுட் மாவட்டத்தில் அமைந்துள்ள டுடுமா நீர்வீழ்ச்சிக்கு (Duduma waterfalls) சென்றிருக்கிறார்.

இந்த நிகழ்வு சம்பவ நாளன்று மதியம் சாகர் நீர்வீழ்ச்சியில் இருந்துகொண்டு ஒரு ட்ரோன் கேமராவை பயன்படுத்தி படம் பிடித்துக் கொண்டிருந்தபோது நடந்திருக்கிறது. வெளியான அந்த வீடியோவில் சாகர் நீர்வீழ்ச்சியின் நடுவில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. மற்றவர்கள் கயிற்றை பயன்படுத்தி அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். எனினும், நீர்வீழ்ச்சியில் இருந்துவந்த வலிமையான நீரோட்டம் அவரை அடித்துச் சென்றுவிட்டது.

லாம்டாபுட் பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக மக்காகுண்டா அணையில் இருந்து தோராயமாக 2,000 கன அடி நீரை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். மேலும், இது குறித்து அங்கு வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனை அறியாமல் திடீரென்று ஏற்பட்ட நீரோட்டத்தை சாகரால் கையாள முடியாமல்போக, அவரை தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது.

உள்ளூர்வாசிகளும், அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அந்த இளைஞரை காப்பாற்றுவதற்கு போதுமான அளவு முயற்சிகளை எடுத்தாலும், அவர்களால் அதனை செய்ய முடியாமல் போனது. இது குறித்து மக்காகுண்டா காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்குவந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

“ODRAF மற்றும் தீயணைப்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த இளைஞர் பெர்ஹாம்பூரை சேர்ந்தவர். இங்கு சுற்றுலாவுக்காக வந்திருக்கிறார். இந்த நிகழ்வு நேற்று நடந்தது. இது குறித்து சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கோராபுட் சூப்பரண்டண்ட் ஆஃப் போலீஸ் மீடியாவிடம் கூறியுள்ளார். சமீபத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சாகரை மீட்பதற்கான தேடுதல் வேட்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஒரு காலத்தில் பாலைவன பூமி; இன்று உலகின் பணக்கார நாடு…! எந்த நாடு தெரியுமா…?

யூடியூபர்கள் தங்களுடைய யூடியூப் சேனலுக்கு சுவாரஸ்யமான வீடியோக்களைப் பதிவு செய்வதற்காக தங்களுடைய பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், இது மாதிரியான விபத்துகளில் மாட்டிக் கொள்வது இப்போது அதிகமாகி விட்டது. எனவே, இனியாவது யூடியூபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அனைவருடைய வேண்டுகோளாகவும் உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 26, 2025 10:22 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ரீல்ஸ் எடுக்கச் சென்ற யூடியூபருக்கு நேர்ந்த சோகம்… நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற வீடியோ வைரல்…!



.

Previous Post

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

Next Post

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை – புகைப்படங்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை – புகைப்படங்கள்

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In