இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரளா பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், “ஸ்டாலினும் அவரது மகனும் இந்து மதத்தை பலமுறை அவமதித்து, இந்து நம்பிக்கையை ஒரு வைரஸ் என்று குறிப்பிட்டு பல அவதூறுகளைப் பரப்பியுள்ளனர். அவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டே பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இது கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள அனைத்து பாஜகவினரிடமிருந்தும், இந்துக்களிடமிருந்தும் பினராயி விஜயன் மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு தெளிவான செய்தி.
பல ஆண்டுகளாக நீங்கள் இருவரும் சபரிமலை, ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மதத்தை புண்படுத்தி, அவமதித்து வந்திருக்கிறீர்கள். பினராயி விஜயன் பல ஐயப்ப பக்தர்களை சிறையில் அடைத்து, பலருக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி, சபரிமலையின் புனித பாரம்பரியங்களை மீறி அவமதித்து வந்திருக்கிறார்.
ஸ்டாலினும் அவரது மகனும் இந்து மதத்தை பலமுறை அவமதித்து, இந்து நம்பிக்கையை ஒரு வைரஸ் என்று குறிப்பிட்டு பல அவதூறுகளைப் பரப்பியுள்ளனர்.இவை ஒவ்வொரு இந்துவின் நினைவிலும் ஆழமாகப் பதிந்துள்ளன, இவை ஒருபோதும் மறக்கப்படவோ மன்னிக்கப்படவோ மாட்டாது.
எனவே, தேர்தல் நெருங்கும் சில மாதங்களுக்கு முன்பு சிபிஎம் அரசு ஐயப்ப சங்கமத்தை கொண்டாடுவது நாடகமாகவும், மக்களை ஏமாற்றும் உத்தியாகவும் உள்ளது.
இந்துக்களிடமும், ஐயப்ப பக்தர்களிடமும் பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்க வேண்டும். பினராயி விஜயன் அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும், சிறையில் அடைக்கப்பட்ட பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், சபரிமலை மரபுகளை மீறியதற்காக ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டாலினும் அவரது வாரிசு உதயநிதியும் கேரளாவுக்கு வரவிரும்பினால், இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வர வேண்டும்.
This is a clear message to @pinarayivijayan n @mkstalin from all the karyakartas of BJP all over and Hindus in Kerala and Tamil Nadu.
Both of you have over the years harmed and insulted Sabarimala, Ayappa bhakts and Hindu faith. Pinarayi vijayan has imprisoned many ayyapa… https://t.co/PvpfNQa1ib
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@RajeevRC_X) August 24, 2025
இதைச் செய்யாமல், ஸ்டாலின் அல்லது பினராயி விஜயன் சபரிமலை பக்தர்களையோ அல்லது அவர்களின் நம்பிக்கையையோ தவறாகப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சித்தால், பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் வெளியே வந்து இதை எதிர்ப்பார்கள்.
இந்த விஷயத்தில் எங்கள் உறுதியின் வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். எங்களைத் தூண்டி விடாதீர்கள். முதலில் மன்னிப்பு கேளுங்கள், பின்னர் உங்கள் அரசியல் நாடகங்களைச் செய்யுங்கள்.
முதலில் மன்னிப்பு கேளுங்கள், பிறகு உங்கள் சந்தர்ப்பவாத அரசியலைச் செய்யுங்கள். எந்தவொரு இந்து மத நம்பிக்கையையும் அல்லது எந்தவொரு நம்பிக்கையையும் அவமதிக்க பாஜக யாரையும் அல்லது எந்த அரசியல் கட்சியையும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
August 25, 2025 9:56 PM IST
”இந்துக்களை புண்படுத்திய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” – கேரளா பாஜக தலைவர்
