அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் கூறியுள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி(50%) விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனினும் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என ரஷிய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சீனாவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
