Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யும் மசோதா… நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமைச்சர் அமித் ஷா | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 20, 2025
in அரசியல் செய்திகள்
0
"பாகிஸ்தான் போரை நிறுத்தயது ஏன்?" – ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:August 20, 2025 2:34 PM IST

பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மக்களவையில் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

அமித் ஷாஅமித் ஷா
அமித் ஷா

கைதுசெய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தாலே, பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலான சட்டத் திருத்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். அதன்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின்கீழும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31ஆவது நாளில் அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.

இதேபோல, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டால், அவர்களைக் குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்யவும், அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படாவிட்டால், தானாகவே பதவி நீக்கம் செய்யப்படவும் வழிவகை செய்யப்படுகிறது. இந்த சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் வகையில், மூன்றாவது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு மாறாக இந்த மசோதா அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலஅவகாசம் தேவைப்படும் சூழலில், அதிலிருந்து விலக்கு அளித்து உடனடியாக தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு மக்களவைச் செயலாளருக்கு அமைச்சர் அமித் ஷா நேற்று கடிதம் எழுதி, இன்று இந்த மூன்று மசோதாக்களையும் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இந்த மசோதாக்களுக்கு தொடக்க நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. இந்த மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது. மேலும், இது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் முயற்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 20, 2025 2:34 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மக்கள் பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யும் மசோதா… நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமைச்சர் அமித் ஷா



.

Previous Post

கால் லிட்டர்(250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 125?

Next Post

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In