இந்நிலையில், தில்லியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்குள்ள ஐடி பிரிவுகளை ஹேக் செய்து, பள்ளி கட்டடங்களில் “பைப் குண்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை” வைத்திருப்பதாக மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனனர். வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க வேண்டுமானால் 25,000 அமெரிக்க டாலர்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் ‘பயங்கரவாதிகள் 111’ குரூப் என தெரிவித்துள்ளனர்.
எந்தப் பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை, ஆனால் மால்வியா நகர் மற்றும் நஜாப்கரில் உள்ள பள்ளிகள் மற்றும் டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி மற்றும் சர்வோதயா வித்யாலயா ஆகியவை வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி ஹவுஸ் ராணியில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய் படை உள்பட தில்லி காவல்துறையின் பல குழுக்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லியில் உள்ள 32 பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, இதனால் பள்ளி நிர்வாகத்தினர் தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக மாணவா்களை பள்ளி பேருந்துகள் மற்றும் தனியாா் வேன்களில் பயணிக்கும் மாணவா்கள் உடனடியாக வீட்டுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
