திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.
மதமாற்றத்தை கண்டித்த திருவிடைமருதூர் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக சென்னை, திண்டுக்கல், கொடைக்கானல், தென்காசி உள்ளிட்ட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
