Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Scheduled Caste; Gujarat village: “எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்” – பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 20, 2025
in அரசியல் செய்திகள்
0
Scheduled Caste; Gujarat village: “எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்” – பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.

குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அங்குள்ள சலூன் கடைகளில் பட்டியல் இனத்தவர்கள் முடி வெட்டிக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அக்கிராமத்தில் உள்ள ஆதிக்கச் சாதியினர் சலூன் கடை நடத்துபவர்களுக்கு இது தொடர்பாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இதனால் அக்கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் முடி வெட்டிக்கொள்ள அருகில் உள்ள நகரம் அல்லது கிராமத்திற்குச் செல்ல வேண்டிய நிலையிலிருந்தனர்.

குழந்தைகளாக இருந்தாலும் அவர்களை பெற்றோர் முடி வெட்டப் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. 6,500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பட்டியலின மக்கள் 250 பேர்தான் வசிக்கின்றனர். இத்தடையை நீக்க வேண்டும் எனப் பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கைக்கு உள்ளூர் சமூக ஆர்வலர் சேதன் ஆதரவு கொடுத்தார். இது தொடர்பாக உள்ளூர் மட்டத்தில் ஆதிக்கச் சாதியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து இப்பிரச்னை போலீஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

போலீஸார் பேசிப்பார்த்தனர். அவர்களாலும் முடியவில்லை. இதையடுத்து இதனை மாவட்ட நிர்வாகத்திற்குக் கொண்டு சென்றனர். அரசு அதிகாரி ஜனக் மேத்தா இவ்விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தை மாதக்கணக்கில் நடந்தது.

இறுதியில் சலூன் கடைகளில் பட்டியலின மக்கள் முடிவெட்டிக்கொள்ள விதிக்கப்பட்டு இருந்த எழுதப்படாத தடையை விலக்கிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் சம்மதம் தெரிவித்தனர். முடிவெட்டிக்கொள்ள மக்கள் 24 ஆண்டுகள் போராடி உரிமையைப் பெற்று இருக்கின்றனர்.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சுரேஷ் செளதரி கூறுகையில், “‘முடி வெட்டிக்கொள்ள அனுமதி கொடுக்கப்படாமல் இருந்ததை நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன். எனது பதவிக்காலத்தில் இத்தடை முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.



.

Previous Post

Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" – சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி

Next Post

டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவு – ஸ்டாலின் இரங்கல் பதிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவு – ஸ்டாலின் இரங்கல் பதிவு

டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவு – ஸ்டாலின் இரங்கல் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In