இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று (ஆக. 19) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கியவர் சுதர்சன் ரெட்டி. தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர்
நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது.
