இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு பயணம் மிகவும் பெருமைமிக்க, புகழ்மிக்க பயணம்” என்றார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ஆர்.எஸ்.எஸ் பற்றி நாட்டு மக்களிடம் பேசுவது அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறுவதாகும். அடுத்த மாதம் பிரதமரின் 75-வது பிறந்தநாள் வருகிறது. இந்த சூழலில் பிரதமரின் ஆர்.எஸ்.எஸ் குறித்த உரை அந்த அமைப்பை திருப்திப்படுத்துவதற்கான தீவிர முயற்சி. அவரின் இந்த உரை அந்த அமைப்புக்குள் இருக்கும் அதிகாரப் போராட்டத்தைக் குறிக்கிறது. பிரதமர் மோடியின் உரை பழைய, பாசாங்குத்தனமான, சலிப்பூட்டும் சுய பெருமை பேசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையான சொற்கள்” என விவரித்தார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, தன் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதைத் தடுக்கும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பேசியிருக்கிறார். அவரின் செயல் தியாகிகளின் நினைவையும் நமது சுதந்திர இயக்கத்தின் உணர்வையும் அவமதிக்கும் வகையிலானது. ஆர்.எஸ்.எஸ் காலனித்துவத்தை எதிர்த்து ஒருபோதும் நேரடிப் பங்காற்றவில்லை. ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற வெகுஜன போராட்டங்களில் இருந்து விலகி இருந்தது.
