Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்… விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்… விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணைகிறார்கள் என்கிற அறிவிப்பு வந்தபோதே பலருக்கும் ஆர்வம் மேலோங்க, தொடர்ந்து, கூலி திரைப்படத்தில் நடிகர்கள் நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இணையவும் நிச்சயமாக வணிக ரீதியாக இப்படம் தமிழில் சாதனையை நிகழ்த்தும் என கணிக்கப்பட்டது.

மேலும், தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் திரைப்படமாக கூலி இருக்கும் எனப் பலராலும் நம்பப்பட்டது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி வியாழக்கிழமை மிகப் பிரம்மாண்டமாக பல திரைகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என ரசிகர்கள் பெரிய ஆவலில் இருந்தனர்.

ஆனால், கதையும் திரைக்கதையும் மோசமாக இருந்ததால் கூலி எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. எந்த கதாபாத்திரமும் சரியாக எழுதப்படாதது உள்ளிட்ட ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகள் திரைக்கதையில், காட்சி உருவாக்கத்தில் இருக்கின்றன.

இதனால், ரசிகர்கள் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முக்கியமாக, ’தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். நேர்காணல்களில் சினிமா குறித்தும் கூலி குறித்தும் பெரிதாகப் பேசிவிட்டு, படத்தில் சொதப்பியுள்ளார். ரசிகர்களை முட்டாள்கள் என நினைத்தால் மட்டுமே இப்படிப்பட்ட கதையை ஒருவரால் எழுத முடியும்” எனத் தாக்கி வருவதுடன் கூலி திரைப்படத்தை கேலி செய்தும் வருகின்றனர்.

அதேநேரம், இந்த ஒரு திரைப்படத்தைக் காரணம் காட்டி லோகேஷை மட்டம்தட்ட வேண்டாம் என சிலர் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நம்பவே முடியவில்லை… ரஷ்மிகா உற்சாகம்!

coolie director lokesh kanagaraj get trolled by fans



.

Previous Post

MK Stalin: "அமெரிக்கா வரியால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்" – பிரதமருக்கு அவசர கடிதம்!

Next Post

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் RSS பற்றிய பேசிதை விமர்சித்துள்ளார் கனிமொழி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் RSS பற்றிய பேசிதை விமர்சித்துள்ளார் கனிமொழி

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் RSS பற்றிய பேசிதை விமர்சித்துள்ளார் கனிமொழி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In