தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்…
“மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரச்னையில் தலையிட்டு, தமிழ்நாட்டிற்கு விமானப் போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் அநீதியைக் கலைய வேண்டும்.

இதற்குப் பதில்…
சென்னை – திருச்சி, சென்னை – தூத்துக்குடி வழியே செல்லும் ஒவ்வொரு இண்டிகோ விமானமும் நிரம்பித்தான் செல்கின்றன. ஆனாலும், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இந்தப் பாதையில் வழக்கமாகச் செல்லும் ATR விமானங்களுக்குப் பதிலாக, “320′ விமானத்தை மாற்ற மறுக்கிறது.
இந்த விமானங்கள் மூன்று அடுக்கு இணைப்புப் பாதைகளுக்கு வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் ஒரு மாநிலத்திற்குச் சரிப்பட்டு வராது.
ஏ.சி அதிகம் இல்லாத இந்த விமானங்களில் பயணிக்கும் பிசினஸ் பயணிகள் F11 ரேசர்கள் போல, வெப்பம் மற்றும் வியர்வை மிகுந்த பயணத்தில் ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ குறைகிறார்கள்.
