சென்னையில் ரிப்பன் மாளிகை முன்னால் 13 நாட்களுக்கும் மேலாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நேற்றிரவு (ஆகஸ்ட் 13) “அப்புறப்படுத்தியிருக்கிறது’ காவல்துறை.
தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கையாண்ட விதத்துக்காக பலதரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கைது செய்யப்பட்டிருந்த போராட்டக்காரர்களைச் சந்தித்த சீமான் செய்தியாளர்களிடம் திமுக அரசைக் கண்டித்துப் பேசியுள்ளார்.
வாக்குறுதிகளை இன்னும் நம்பச் சொல்கிறீர்களா?

தனியார் மயமாதல், நீதித்துறை மற்றும் அரசு மீது கடுமையான கருத்துக்களை முன்வைத்து அவர் பேசியதாவது:
“மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு இருந்து போராடுவதில் நியாயம் இல்லையா? பொதுமக்களுக்கு இடையூறு என்கிறார்கள்… போராடுபவர்கள் பொதுமக்கள் இல்லையா?
நள்ளிரவில் அடித்து பெண்களை சித்ரவதை செய்து வாகனத்தில் ஏற்றி அடிப்படை வசதிகள், தண்ணீர், உணவு இல்லாத இடத்தில் அடைத்து அலைக்கழிப்பதைத்தான் இந்த நாட்டின் நீதித்துறை விரும்புகிறதா?
இவ்வளவு நாள் கண்டுகொள்ளாமல் இருந்த அரசு அதிகாரம் இன்று, துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு போடுகிறோம், மருத்துவக் காப்பீடு கொடுக்கிறோம், இறந்துவிட்டால் 10 லட்சம் நிவாரணம் தருகிறோம் என அறிவிக்கிறது.
