Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“உறுப்பினர் சேர்க்க `ஓரணியில் தமிழ்நாடு’ என பிச்சை எடுக்கிறார்கள்’’ – கொதித்த எடப்பாடி பழனிசாமி | edappadi palanisamy strongly criticizes cm stalin in gudiyatham constituency

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2025
in அரசியல் செய்திகள்
0
“உறுப்பினர் சேர்க்க `ஓரணியில் தமிழ்நாடு’ என பிச்சை எடுக்கிறார்கள்’’ – கொதித்த எடப்பாடி பழனிசாமி | edappadi palanisamy strongly criticizes cm stalin in gudiyatham constituency
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, பேருந்து நிலையப் பகுதியில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது, “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கடனை குறைத்து வருவாயை அதிகரிக்க நிபுணர் குழு அமைத்தார்கள். குறைத்தார்களா, இல்லை. கடன் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். 4 வருடத்தில் 4.38 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். இன்னும் ஓராண்டு பாக்கி. இன்னும் 1 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை கடன்காரர்களாக ஆக்கியது தான் இந்த ஆட்சியின் சாதனை. ஸ்டாலின் வாங்கிய இந்தக் கடனை நாம்தான் கட்ட வேண்டும்.

ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். அப்படியே தினம் வருவார். கோட் சூட் போடுவார். பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பார். ஒரு திட்டத்தை அறிவிப்பார். பெயர் வைப்பார். போய்விடுவார். இப்படியே 4 வருடம் வண்டியை ஓட்டிவிட்டார். உண்மை தானே? நான் ஆதாரத்தோடு சொல்கிறேன்.

குடியாத்தத்தில்...

குடியாத்தத்தில்…

தி.மு.க ஆட்சியில் தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறதா? ஸ்டாலின் காதுக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாக சொல்லுங்கள். `மக்களிடம் எந்த நேரத்தில் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம்’ என்பதில் தி.மு.க-வினர் கைதேர்ந்தவர்கள். இன்னும் ஏழெட்டு மாதங்கள் தான் இருக்கிறது. ஒரு நோயாளி உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது மருத்துவமனையில் வென்டிலேட்டர் வைப்பார்கள். அப்போது தான் உயிர் போகாமல் இருக்கும். அது மாதிரி தி.மு.க ஆட்சி, மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கிறது. அந்த வென்டிலேட்டர் எடுத்தால் நோயாளியின் உயிர் போய்விடும். அதுபோல, மக்கள் கைவிட்டால் இதோடு தி.மு.க ஆட்சி க்ளோஸ். `அ.தி.மு.க ஆட்சி திறமையான ஆட்சி’ என்பதற்கான சான்றை நாங்கள் பெற்றிருக்கிறோம். தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் சிறப்பாக செயல்பட்டு 140 விருதுகளை பெற்றிருக்கிறோம். கூட்டுறவுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, சமூக நலத்துறை, உயர்க்கல்வித் துறை என பலத் துறைகளிலும் தேசிய அளவில் விருது பெற்று, `தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலம்’ என்ற பெயரை நாங்கள் பெற்றோம். தி.மு.க என்ன பெயர் பெற்றிருக்கிறது? `இந்தியாவிலேயே ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு’ என்ற பெயரைத்தான் பெற்றிருக்கிறது.

தி.மு.க கட்சி அல்ல, `கார்ப்பரேட் கம்பெனி’. அதனால்தான் மக்கள் செல்வாக்கையும், கட்சியினரின் செல்வாக்கையும் இழந்துவிட்ட ஸ்டாலின் வீடு வீடாக போய் கதவைத் தட்டி `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இந்திய வரலாற்றில், இதுவரைக்கும் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாவது வீடு வீடாக கதவை தட்டி பிச்சை எடுக்கிற மாதிரி `எங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்று கேட்டது உண்டா? தி.மு.க-வுக்கு அப்படிப்பட்ட நிலைமை வந்துவிட்டது. உறுப்பினர்கள் சேர்ப்பதற்கே பிச்சை எடுக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டுமா?’’ என்றார் கொதிப்போடு. இதையடுத்து, கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.



.

Previous Post

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In