தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், “டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் உடனடியாக ஒரு தெருநாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும்.
இதற்காக அவர்கள் சிறப்பு படை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த தெருநாய்கள் பிடிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யப்படக்கூடாது. `தெருநாய்கள் இல்லாத சுற்றுப்புறம்” என்பதை அடிப்படையாக வைத்து அதிக முக்கியத்துவம் வழங்கி இந்த விவகாரத்தை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
