இதற்காக, யுஇஎஃப்ஏ சுலைமானுக்கு இறங்கல் பதிவிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது:
‘பாலஸ்தீன பீலே’ சுலைமான் அல்-ஒபெய்டுக்கு பிரியா விடை. நெருக்கடியான காலங்களிலும்கூட எண்ணற்ற குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்த திறமைசாலி எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் ரீஷேர் செய்து முகமது சாலா, “அவர் எப்படி, எங்கு, எதனால் இறந்தார் என்று எங்களுக்குக் கூற முடியுமா?” எனப் பதிவிட்டுள்ளார்.
இது உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டுள்ளது. கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
எகிபதிய அரசன் என அழைக்கப்படும் முகமது சாலா லிவர்பூல் அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்தாண்டின் பேலந்தோர் விருதுக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்.
