பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதனால், இருதரப்புக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அன்புமணி அறிவித்திருக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்குமாறு ராமதாஸ் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், `ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்து, அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை” என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அன்புமணி, `இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
