9 மணிக்கே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. 1:50 மணியளவில்தான் அமைச்சர் சேகர் பாபுவும் மேயர் பிரியாவும் பேச்சுவார்த்தையை முடித்து வெளியே வந்தனர். “பேச்சுவார்த்தை எப்படி போச்சு…’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, ‘பேச்சுவார்த்தையா என்ன பேச்சுவார்த்தை…’ என கடுப்பான முகத்துடன் கேட்டார் சேகர்பாபு. ‘தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்திங்களே…’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, ‘இல்ல…நீங்க கொடுங்க..நாங்க கொடுத்த வாக்குறுதியை கொடுங்க…கொடுங்க…கொடுங்க…’ என அந்த பத்திரிகையாளர் மீது பாய்ந்தார்.

‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தாரே…’ என இன்னொரு செய்தியாளர் பாலோ அப் கேள்வியை போட அதற்கும் சேகர் பாபு டென்ஷன் ஆனார். ‘வாக்குறுதி கொடுக்கலை…நீங்க எந்த பிரஸ்ஸூ’ என கேட்டார். அவர், ‘நீலம்’ என சொல்ல, ‘நான் பத்திரிகையாளர்களைதான் சந்திக்கிறேன். உங்களை சந்திக்கலை…’ என வெடுக்கென கேள்வியை கட் செய்தார்.

மேற்கொண்டு பேசியவர், ‘அவங்களும் எங்க மக்கள்தான். எங்களோட ஊன், உடல் உயிரோட கலந்திருக்காங்க. அவங்க தரப்பு நியாயத்தை சொல்லிருக்காங்க. அரசால் என்ன செய்ய முடியும்னு நாங்க சொல்லிருக்கோம். நாளை மதியம் மீண்டும் சந்திக்கிறோம். பேசிவிட்டு இருதரப்பும் சேர்ந்தே உங்களை சந்திக்கிறோம்.’ என்றார்.
