Last Updated:
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால், மைலேஜ் 6% குறையும், என்ஜின் பாதிக்காது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்.
இதற்கிடையில், பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், என்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவின. இது வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்து, எத்தனால் கலப்பால் பெட்ரோல் மைலேஜ் 6% வரை மட்டுமே குறையும் என விளக்கமும் அளித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம், “எத்தனால் – பெட்ரோல் கலவைகளின் செயல்பாடு குறித்து சர்வதேச ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் பெரிய அளவில் மைலேஜ் குறையும் என்பது உண்மையல்ல.
4 சக்கர வாகனங்களுக்கு 1 – 2% மற்ற வாகனங்களுக்கு 3 – 6% வரை மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின் பாதிக்கப்படும் என்பதில் உண்மையில்லை” எனத் தெரிவித்துள்ளது.
August 05, 2025 3:10 PM IST
எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் மைலேஜ் எவ்வளவு குறையும் தெரியுமா? மத்திய அரசு கொடுத்த விளக்கம்
