Last Updated:
உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், உத்தரகாசி அருகே மேகவெடிப்பால் பெருமழை பெய்தது.
உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் பகுதியில் மட்டும் 30 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ஒரு கிராமத்தின் பெரும்பாலான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், உத்தரகாசி அருகே மேகவெடிப்பால் பெருமழை பெய்தது.
இதனால், ஹர்சில் பள்ளத்தாக்கில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கீர் கங்கா ஆற்றில் சேறும் தண்ணீரும் கலந்த காட்டாற்று வெள்ளம் பெரும் சீற்றத்துடன் பாய்ந்தது. அப்போது, தராலி என்ற கிராமத்தில் கரையோரம் இருந்த வீடுகள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் நொடிப்பொழுதில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Meandering section of the River bore the power of nature. Extreme rains happened in many parts of Uttrakhand. Haridwar recorded 304 mm in the downstream area. https://t.co/lrEit6wq0C
— Tamil Nadu Weatherman (@praddy06) August 5, 2025
இதனைத்தொடர்ந்து காட்டாற்று வெள்ளத்தால் நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 60 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் பகுதியில் மட்டும் 30 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Uttarakhand (Uttaranchal)
August 05, 2025 4:15 PM IST

