Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் தோற்கடிக்கப்பட்டதற்காக எதிர்க்கட்சிகள் வருத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் 6 ஆம் ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆபரேசன் சிந்தூர் மற்றும் ஆபரேசன் மகாதேவ் நடவடிக்கைக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து மாலை அணிவித்து எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனத்தைப் பற்றி பேசுவதாகவும், ஆனால், காஷ்மீரில் அதனை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சாடினார். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் தவறாகக் கணக்கிட்டு விட்டதாகவும் விமர்சித்தார்.
Delhi,Delhi,Delhi
August 05, 2025 4:24 PM IST

