Last Updated:
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 4ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாட்டு பணிகள், தேசிய நெடுஞ்சாலைகள், சரக்கு போக்குவரத்துக்காக ரயில் திட்டங்கள் என தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மத்திய அரசு முனைப்புடன் செய்து வருவதாவும் யாருக்கும் பயனின்றி நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழகத்திற்கு என்ன பயன்? இதுவரை நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெற்றது என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்று வளம்கொழிக்கும் தொழிலாக விளங்குவது சாராய ஆலைகள் மட்டும் தான் என குற்றம் சாட்டிய எல். முருகன் அதன் மூலம் திமுகவினர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற போட்டி போடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் காலம் முதலே தொன்றுதொட்டு தமிழ்நாடு உற்பத்தி மாநிலமாகத் திகழ்ந்து வரும் நிலையில், போலி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவினர் இதனை தங்கள் சாதனையாக விளம்பரப்படுத்த முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி தொழிற்பேட்டை, விருதுநகர் ஜவுளி பூங்கா, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் எல்லாம் வெற்று அறிவிப்பாகவே இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இதுவரை முதலமைச்சரின் வெளிநாட்டு பயனங்கள், முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு, உருவாக்கப்பட்ட வேலைவாய்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Delhi,Delhi,Delhi
August 05, 2025 4:36 PM IST
“4 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை” – தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்

