வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் எந்த பிரச்னைகள் கருவுறுதலில் ஆண்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகின்றன?
உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகிய இந்த இரண்டும் கருவுதலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இது ஆண்களிடையே
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவைக் குறைகிறது, ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கிறது. இதனால் விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை, இயக்கம், டிஎன்ஏ ஆகியவற்றை சேதப்படுத்துகிறது. இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு நோயுடன் தொடர்புடையது.
வாழ்க்கை முறையை மாற்றுவதால் இதனைத் தடுக்க முடியுமா?
வாழ்க்கை முறை மாற்றங்கள் கண்டிப்பாக வளர்சிதை மாற்ற நோய்க்குறி பிரச்னையை சரிசெய்யும்.
உடல் எடையைக் குறைப்பது, சத்தான உணவு உட்கொள்வது, சுறுசுறுப்பாக இருப்பது, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம், விந்தணுக்களின் தரத்தையும் இயக்கத்தையும் மேம்படுத்த வாய்ப்புள்ளது.
2023 ஆம் ஆண்டு ஃபிரன்டியர்ஸ் இன் எண்டோகிரைனாலஜியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதுபோன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகளை சரிசெய்யும்போது இயற்கையாகவோ அல்லது மருத்துவ உதவியுடனோ கருவுறுதல் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகிறது.
