Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உத்தரகாசியில் மேக வெடிப்பு; பெரும் வெள்ளம்… மழை வெள்ளத்தில் புதையுண்ட கிராமம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 5, 2025
in அரசியல் செய்திகள்
0
உத்தரகாசியில் மேக வெடிப்பு; பெரும் வெள்ளம்… மழை வெள்ளத்தில் புதையுண்ட கிராமம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக மிக கன மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஓட்டல்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வாடிக்கை. இந்தப் பகுதியின் அருகே தரலி எனும் கிராமம் அமைந்துள்ளது.

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ளூர்வாசிகள் வசித்துவருகின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகளுக்காக பல ஓட்டல்களும் அமைந்துள்ளன.

இந்நிலையில், கீர் கங்கா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மிக கன மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தரலி கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஓட்டல்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எதிர்பாராத இந்தச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பெரும் மழை வெள்ளத்தில் சேறும் கலந்து வந்ததால், மலை அடிவாரத்தில் இருக்கும் தரலி கிராமம் முழுவதுமாகவே மண்ணில் புதையுண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது அந்தப் பகுதியில், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆனால், தொடர்ந்து மழை பெய்துவருவதாலும், கீர்கங்கா நதி நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அங்கு மேலும் அச்சம் நிலவிவருகிறது.

“இங்கே நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இந்த வெள்ளத்தில் பல ஹோட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டன – இந்த பகுதியில் சுமார் 50 ஹோட்டல்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கின, பல கிராமவாசிகள் சிக்கிக் கொண்டனர். மழை இன்னும் தொடர்கிறது. ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அருகிலுள்ள மலைகளுக்கு சென்றுள்ளனர்” என வெள்ளப்பெருக்கை நேரில் கண்ட சுரேஷ் செம்வால் என்பவர் CNN-News18க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“தாராலி (உத்தரகாஷி) பகுதியில் மேகமூட்டத்தால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. SDRF, NDRF, மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட குழுக்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த விஷயம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்பிற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி  தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்திற்கு வரும் 10ஆம் தேதி வரை கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், மலை பகுதிகளில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Uttarkashi,Uttarakhand (Uttaranchal)

First Published :

August 05, 2025 4:01 PM IST



.

Previous Post

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

Next Post

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In