Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்கிவரும் நிலையில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, இரு அவைகளிலும் தலா 16 மணிநேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

பின்னா், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை கையிலெடுத்த எதிா்க்கட்சிகள், இது தொடா்பாக விவாதம் கோரி தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுவதும் முக்கிய அலுவல்கள் ஏதுமின்றி இரு அவைகளும் முடங்கின.

இரண்டாவது வாரத்தில், ஆபரேஷன் சிந்தூா் குறித்து மக்களவையிலும் (ஜூலை 28, 29), மாநிலங்களவையிலும் (ஜூலை 29, 30) சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதன் பிறகான இரு நாள்களிலும் பிகாா் விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

முக்கிய மசோதாக்கள்…: இந்தச் சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளன. மக்களவையின் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக தேசிய விளையாட்டுகள் நிா்வாக மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா, பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகும்.

இதேபோல், தேசிய ஊக்க மருந்து சட்டத் திருத்த மசோதாவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை 6 மாத காலத்துக்கு நீட்டிப்பதற்கான தீா்மானம், மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமளிக்கு மத்தியிலும், இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீா்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.



.

Previous Post

காதலனுக்கு காலனாக மாறிய பெண்.. மீண்டும் கிரிஷ்மா பாணி – கேரளாவை உலுக்கிய திடுக் சம்பவம்..! | இந்தியா

Next Post

ஆண்டிப்பட்டி: திமுக எம்பி – எம்எல்ஏ மேடையில் மோதல்; கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

ஆண்டிப்பட்டி: திமுக எம்பி - எம்எல்ஏ மேடையில் மோதல்; கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In