Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை நமது படை சுட்டு வீழ்த்தியது என எதிர்க்கட்சி கேட்டதே இல்லை” – அமைச்சர் ராஜ்நாத் சிங்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2025
in அரசியல் செய்திகள்
0
“பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை நமது படை சுட்டு வீழ்த்தியது என எதிர்க்கட்சி கேட்டதே இல்லை” – அமைச்சர் ராஜ்நாத் சிங்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காஷ்மீர், பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம், பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து தாக்கி அழித்தது.

இதனையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பு நாடாளுமன்றம் கூடி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பின்னர் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் துவங்கிய 21ஆம் தேதி முதல் தொடர்ந்து அவையில் பிகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், நீதிபதி யஷ்வந்த் வர்மா உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனையடுத்து இன்று பிற்பகல் அமர்வில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் துவங்கி வைத்தார்.

அப்போது மக்களவையில் பேசிய அவர், “மக்கள் பிரச்சனைகளைச் சார்ந்த கேள்விகளை அரசின் முன் எழுப்புவதே எதிர்க்கட்சிகளின் வேலை. நமது எதிர்க்கட்சிகள், இந்தியாவின் எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றுதான் கேட்கிறார்களே தவிர, எத்தனை பாகிஸ்தான் விமானங்களை நமது படை சுட்டு வீழ்த்தியது எனக் கேட்டதே இல்லை. உங்களுக்கு கேள்வி கேட்க வேண்டும் என்றால், இந்த ஆபரேஷனில் நமது வீரர்கள் எத்தனை பேர் காயம் அடைந்தனர் எனக் கேளுங்கள். ஆனால், யாருக்கும் காயம் இல்லை என்பதே பதில்.

உங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நமது தங்ககைகள் மற்றும் மகள்களின் சிந்தூரை அழித்த தீவிரவாதிகளின் மூளையாக செயல்பட்டவைகளை நமது படைகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழித்ததா எனக் கேளுங்கள். இதற்கு பதில், ஆம் அனைத்து இலக்கையும் நாம் அடைந்துள்ளோம்.

பாகிஸ்தானால் வளர்க்கப்படும் தீவிரவாதத்தை அழிப்பதும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நீதி வழங்குவதுமே, ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.

பயங்கரவாதத்தின் பெயரில் மறைமுகப் போரை நடத்தி பாகிஸ்தானைத் தண்டிப்பதே இந்த நடவடிக்கையின் அரசியல்-இராணுவ நோக்கமாகும். எனவே, ஆயுதப் படைகள் தங்கள் இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தகுந்த பதிலடி கொடுக்க சுதந்திரம் அளிக்கப்பட்டது. போரைத் தொடங்குவது இதன் நோக்கமல்ல” என பேசினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 28, 2025 5:28 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை நமது படை சுட்டு வீழ்த்தியது என எதிர்க்கட்சி கேட்டதே இல்லை” – அமைச்சர் ராஜ்நாத் சிங்



.

Previous Post

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

Next Post

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In