Last Updated:
இதுபோன்ற சூழல்களில் எந்தவித சலனமும் ஏற்படாமல் உயிரிழப்பு உடனடியாக சமீப காலங்களில் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து உடலில் முன்னரே அறிகுறிகள் ஏற்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
25 வயது இளைஞர் ஒருவர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இங்கு குண்டலா ராகேஷ் என்ற இளைஞர் தங்களது நண்பர்களுடன் அங்குள்ள பேட்மின்டன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அவர் நன்றாக சரிந்து விழுந்து உயிரிழந்தார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் ராகேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பேட்மிட்டன் மைதானத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
இதுபோன்ற சூழல்களில் எந்தவித சலனமும் ஏற்படாமல் உயிரிழப்பு உடனடியாக சமீப காலங்களில் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து உடலில் முன்னரே அறிகுறிகள் ஏற்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
July 28, 2025 6:16 PM IST

