எதிர்க்கட்சி கூட்டணிக்கு எதிராக பிரதமர் மோடி சமீபத்தில் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமரின் கருத்துக்களுக்கு தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய காந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை குணப்படுத்த எதிர்க்கட்சிகள் உதவும் என்று கூறினார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “மிஸ்டர் மோடி, நீங்கள் என்ன வேண்டுமானாலும் எங்களை அழைக்கவும். நாங்கள் இந்தியா. மணிப்பூரை குணப்படுத்தவும், ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கவும் நாங்கள் உதவுவோம். இந்தியாவின் மக்கள் அனைவருக்கும் அன்பையும் அமைதியையும் மீண்டும் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம்” என்று கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சிக் கூட்டணியான இந்தியா, திசையில்லாமல் இருப்பதாகவும், நோக்கம் இல்லாமல் இருப்பதாகவும் விமர்சித்தார். கிழக்கிந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் போன்ற தேசவிரோத நிறுவனங்களை அவர் INDIA கூட்டணிக்கு சமமாக மேற்கோள் காட்டினர்.
நாட்டின் ( INDIA ) பெயரைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்துவதாக கூறினார்.. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் தனது அரசாங்கத்தின் திறன் குறித்து மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

