* குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் “கமலை எனக்குப் பிடிக்கும். அதை அவரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர் தங்கை என்று சொல்லிவிட்டார்,” என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியது வைரலான நிலையில், “45 வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே ‘star-struck’ ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, ‘என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாகக் கலாய்த்தார்கள்.” என விளக்கமளித்துள்ளார்.

* நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பிரதமர் மோடியை கண்டித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு மறுப்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா “மன சமநிலையை இழக்கிறார்” என விமர்சித்ததுடன் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார். எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்துக்குப் பிறகு தான் பேசியவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டவர், அதற்காக மன்னிப்பும் கேட்டார்.
* திருநெல்வேலியில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கு தொடர்பாக கொலையாளி சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
* நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* இந்தியா – அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான நிசார் செயற்கைகோள் திட்டம் வெற்றிபெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!
