Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.

இதற்கான ஒப்பந்தம் 2014 செப். 30-இல் கையொப்பமானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் சுமாா் ரூ. 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பல்வேறுகட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவ திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.



.

Previous Post

tirunelveli kavin case; நெல்லை ஆணவப் படுகொலை: “இது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Next Post

நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan

நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In