இது பெற்றோர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடும் கோபத்தைத் தூண்டி உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியை பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ள இந்த சம்பவம் குர்ஜா தொகுதியில் உள்ள முண்டகேடா தொடக்க பள்ளியில் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தில் வழக்கமான பள்ளி நேரங்களில் ஒருநாள் பதிவு செய்யப்பட்ட இந்த வைரல் வீடியோவில், ஆசிரியை ஒரு நாற்காலியில் அமர்ந்து, வீட்டில் செய்வதை போன்று சாவகாசமாக பாட்டிலை தனது உச்சந்தலைக்கு மேலே கவிழ்த்து சிறிது ஆயிலை கொட்டி, பின் தனது தலைமுடியில் மசாஜ் செய்துகொள்ளும் காட்சி பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் தான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு அருகிலுள்ள தனது டேபிளில் மொபைலை சாய்த்தபடி வைத்து அதுவும், அதில் ‘அமர் பிரேம்’ படத்தின் ‘Bada Natkhat Hai Yeh’ பாடலின் வீடியோவை வைத்து, தானும் அந்த பாடலை சற்று சத்தமாக பாடி என்ஜாய் செய்வதையும் காண முடிகிறது. வகுப்பறை என்றும் கூட யோசிக்காமல் அந்த ஆசிரியை தனது மொபைலை ப்ளூடூத் ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து சத்தமாக பாடலை ஒலிக்கச் செய்துள்ளார். அவருக்கு எதிரே உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் கல்வி சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபாடாமல், அமைதியாக அமர்ந்து தங்களது வகுப்பறையில் ஆசிரியை செய்யும் அட்டகாசத்தை பார்த்து கொண்டிருப்பதை வைரல் வீடியோவில் காண முடிகிறது.
ஆசிரியையின் பொறுப்பற்ற நடத்தை அடங்கிய வீடியோ வைரலான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி லட்சுமிகாந்த் பாண்டே, குறிப்பிட்ட அந்த ஆசிரியை உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். “இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று பாண்டே தகவல் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாகப் பரவியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் குறிப்பிட்ட ஆசிரியை மட்டுமல்ல, உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பொது கல்வியின் நிலையையும் விமர்சித்தனர்.
ஒரு யூஸர் “அவர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட வேண்டும். அவர் வீட்டில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்” என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு யூஸர் குறிப்பிடுகையில் நம் அரசுப் பள்ளிகளில், ஆசிரியைகள் நாள் முழுவதும் கொத்தமல்லி, கீரை மற்றும் பூண்டு உரித்துக்கொண்டே இருக்கிறார்கள், அதே நேரத்தில் ஆண் ஆசிரியர்கள் டீ குடிக்கிறார்கள் மற்றும் புகைக்கிறார்கள்” என மிகவும் கிண்டலான கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
बुलंदशहर के कस्बा खुर्जा क्षेत्र में स्थित मुंडाखेड़ा के प्राथमिक विद्यालय में चल रही क्लास में सुकून से बालों में चंपी कर रही मैडम साथ ही स्पीकर बजा कर गाना सुन रही है
— Kreately.in (@KreatelyMedia) July 20, 2025
“நமது அரசுப் பள்ளிகளின் சோகமான உண்மை இதுதான். இங்கு படிக்கும் குழந்தைகள் நல்ல கல்வி பெற தகுதியானவர்கள் என்றாலும், இந்த ஆசிரியை வகுப்பில் எண்ணெய் மசாஜ் செய்வதிலும் இசையை ரசிப்பதிலும் மும்முரமாக இருக்கிறார். இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்?” என்று வினவியுள்ளார்.
மற்றொரு யூஸர், ” இந்த மேடம் தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதைப் பார்ப்பதற்காகவே குழந்தைகளின் காலை தூக்கம் தொந்தரவு செய்யப்பட்டது. இந்திய கல்வி முறை மிகவும் மோசமானது. குறைந்தபட்சம் அதை PT பீரியட்டாக அறிவித்திருக்கலாம், அவர்கள் விளையாடும்போது இன்னும் அதிகமாகக் கற்று கொண்டிருப்பார்கள்” என்று விரக்தி கலந்த கேலியை வெளிப்படுத்தியுள்ளார்.
