ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, “ஒப்பந்தம் பேசலாம்’ என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்தக் காலக்கெடுவைப் பயன்படுத்தி, சில நாடுகள் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் போட்டு, தங்களுடைய நாட்டிற்கான வரி விகிதத்தை குறைத்துள்ளது.
ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு வராத நாடுகளுக்கு ட்ரம்பே கடிதம் எழுதி வருகிறார்.

இந்தியா இப்போதுவரை அப்படி எந்த ஒப்பந்தமும் அமெரிக்கா உடன் போடவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை மட்டும் நடந்துவருகிறது.
இதை இந்திய அரசு தரப்பும் உறுதி செய்துள்ளது. ட்ரம்பும் பல முறை இந்தப் பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்துவிட்டார்.
ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி வர, இன்னும் ஒரு நாளே உள்ளது.
