Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போரை நிறுத்தியது யார்? மக்களவையில் பிரதமர் மோடி – ராகுல் காந்தி காரசார விவாதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2025
in அரசியல் செய்திகள்
0
போரை நிறுத்தியது யார்? மக்களவையில் பிரதமர் மோடி – ராகுல் காந்தி காரசார விவாதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 30, 2025 6:32 AM IST

ராகுல் காந்தி பிரதமர் மோடியை டிரம்ப் பொய் சொல்வதை மறுப்பாரா என சவால் விட்டார். பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் இந்தியாவிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த கூறவில்லை என பதிலளித்தார்.

ராகுல் காந்தி - பிரதமர் மோடிராகுல் காந்தி - பிரதமர் மோடி
ராகுல் காந்தி – பிரதமர் மோடி

டிரம்ப் சொல்வது பொய் என பிரதமர் மோடி கூறுவாரா என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால் விட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த எந்த உலகத் தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை என பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, சிங்கம் போன்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றார். அரசியல் தலைவர்களின் நிர்பந்தத்தின் காரணமாக நாம் போர் விமானங்களை இழந்ததாகவும் கூறினார்.

உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்களே தவிர பாகிஸ்தானுக்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் ராகுல் கூறினார். மேலும் போரை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் 29 முறை கூறிவிட்டதாக தெரிவித்த ராகுல் காந்தி அதனை பிரதமர் மோடி நாடாளுமன்ற உரையில் மறுப்பாரா என சவால் விடுத்தார்.

மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனிருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து சாப்பிட்டது குறித்து ஏன் மத்திய அரசு எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்றும் ராகுல் சாடினார். எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, உலக நாடுகளே இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த போது கூட காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றார்.

பிரதமரின் உரையின் போது எதிர்க்கட்சிகள் டிரம்ப், டிரம்ப் என முழுக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய பிரதமர், மே 9ம் தேதி அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தன்னை அழைத்து பாகிஸ்தான் பெரிய தாக்குல் நடத்த உள்ளதாக கூறிய போது, அப்படி நடந்தால் அதற்கு தக்க பதிலடி தருவோம் என பதில் அளித்ததாக கூறினார். பல வீரமான மன்னர்கள் தோன்றிய மண் என்பதால் இயல்பிலேயே இந்தியா தீரம்மிக்க நாடு என்றும் பெருமிதம் தெரிவித்தார்..

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த ராகுல் காந்தி, பிரதமர் தனது உரையில் டிரம்ப் சொல்வது பொய் என்று சொல்லவே இல்லை என்றார். மேலும் ஒரு இடத்தில் கூட தனது உரையில் சீனா குறித்து பிரதமர் குறிப்பிடவில்லை என்றும் ராகுல் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 30, 2025 6:32 AM IST



.

Previous Post

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

Next Post

காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In