Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

mansoor ali khan: “காவலர்கள் புகழடைய என்னை அசிங்கப்படுத்துகின்றனர்” – கண் கலங்கிய மன்சூர் அலி கான்; பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2025
in அரசியல் செய்திகள்
0
mansoor ali khan: “காவலர்கள் புகழடைய என்னை அசிங்கப்படுத்துகின்றனர்” – கண் கலங்கிய மன்சூர் அலி கான்; பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் நடிகர் மன்சூர் அலி கான்.

இதுகுறித்து இன்று (ஜூலை 28) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு நபர் காவல்துறையில் புகார் அளித்த உடனேயே எஃப்.ஐ.ஆர் போடுவது என்ன சட்ட ஒழுங்கு? விசாரிக்க வேண்டாமா? 5,6 வருஷம் முன்னாடி மண்ணடியில் ஒருவருக்கு 35 லட்சம் கொடுத்து ஒரு இடம் வாங்குவதாக இருந்தது.

பின்னால் இடம் வேண்டாம் எனப் பணத்தைத் திருப்பக் கேட்டபோது அவர் கொடுக்கவில்லை என்பதால் நீண்ட நாட்களாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகிறேன். ஆனால் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இப்போது எனக்குப் பணத்தேவை இருப்பதனால் அவரிடம் கேட்பதற்காகச் சென்றுள்ளான். ஆனால் என் மகனை நேரில் கூட பார்க்காமல் காவல்துறைக்கு ஃபோன் செய்துள்ளார். இதற்கு ஒரு எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள்.

அதற்குள் ஒரு பத்திரிகை என் மகனைக் கைது செய்துவிட்டனர் என வன்மம் கக்கியிருக்கிறது. இப்போதுதான் ஒரு ஆல்பத்தில் பணியாற்றி வருகிறேன், எப்போதெல்லாம் நான் முன்னேறுகிறேனோ அப்போதெல்லாம் அசிங்கப்படுத்துகின்றனர்.

மன்சூர் அலி கான்

மன்சூர் அலி கான்

இங்கே காவல்துறை அதிகாரியின் பெயர் விஜயகாந்த், அவர் “என் பெயர் விஜயகாந்த். நீங்கள் மன்சூர் அலிகான், நான் சொல்வதைக் கேட்க வேண்டும்’ என்கிறார். இன்னொருவர் பெயர் பிரபாகரன்… எல்லோரும் ஈகோவில் அந்தந்த நபர்களாகவே வாழ்கின்றனர்.



.

Previous Post

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு: கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு

Next Post

ஊழியா்கள், விண்ணப்பதாரா் மீது காவல் துறை வழக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஊழியா்கள், விண்ணப்பதாரா் மீது காவல் துறை வழக்கு

ஊழியா்கள், விண்ணப்பதாரா் மீது காவல் துறை வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In