மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மிகவும் முன்னதாகவே பேசியிருக்க வேண்டும் என்று MNF ( Mizoram National Front )கட்சியின் மக்களவை MP சி.லால்ரோசங்கா கூறியுள்ளார்.. இதைப்பற்றி NDA கூட்டத்தில் விவாதிக்க வேண்டாம் என மறைமுகமாக மோடி கூறியதாக அவர் கூறியுள்ளார்.
மணிப்பூரில் இனக்கலவரத்தை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தவறிவிட்டதை சுட்டிக்காட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான மிசோரம் தேசிய முன்னணியின் (எம்என்எஃப்) மக்களவை MP, சி.லால்ரோசங்கா, முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மாநிலத்தை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
MNF மிசோரமில் ஆளும் கட்சியாக உள்ளது. அக்கட்சியின் ஜோரம்தங்கா மிசாரமில் முதல்வராக உள்ளார்.. இது பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் (NEDA) ஒரு அங்கமாகவும் உள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், MNF இன் சி. லால்ரோசங்கா மிசோரமில் உள்ள ஒரே நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று MP யாக உள்ளார்.
லால்ரோசங்கா சமீபத்தில் தனது கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் கலந்து கொண்டார், ஆனால் மணிப்பூர் பிரச்சனை மற்றும் பொது சிவில் சட்டம் (யுசிசி) குறித்து விவாதிக்க வேண்டாம் என்று தனக்கு ‘மறைமுகமாக’ கூறப்பட்டதாகக் கூறுகிறார்.

