Last Updated:
பிகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பிகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பிகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு சரமாரி கேள்விகளை எழுப்பி, வாக்குரிமைக்கு நம்பகமான ஆவணங்கள் பட்டியலில் ஆதாரை சேர்க்க பரிசீலிக்குமாறு கூறியிருந்தது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், குடியுரிமை மற்றும் வசிப்பிடத்திற்கு ஆதார் ஆதாரம் அல்ல என்ற ஆதார் சட்டத்தை குறிப்பிட்டு நம்பகமான ஆவணங்கள் பட்டியலில் ஆதாரை இணைக்க மறுப்பு தெரிவித்தது. இந்த சூழலில், நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிக்கிறது.
July 28, 2025 8:35 AM IST
பிகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

