விழா நடைபெறும் மேடைக்கு பிரதமர் மோடி வந்தவுடன் அவருக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரி அமைச்சர் தங்கம் தென்னரசால் வழங்கப்பட்டது. இதனையடுத்து தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
“வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு ராமேஸ்வரம் பூமியில் கால் வைத்துள்ளேன். வளர்ச்சியடைந்த பாரதத்தை படைப்போம் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே எங்களது முன்னுரிமை. அதனோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று எழுச்சிபொங்கி பேசினார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
