அதைத் தொடர்ந்து, ஜூலை 26, 27-ல் மோடி தமிழகத்துக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி, நாளை மாலை 5:50 மணியளவில் மாலத்தீவிலிருந்து விமானத்தில் புறப்படும் மோடி, இரவு 07:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைவார்.
பின்னர் விமான நிலைய வளாகத்தில் 08:30 மணி முதல் 09:30 மணி வரை, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைப்பதோடு, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, 09:40 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கிளம்பும் மோடி 10:35 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைவார்.
அங்கிருந்து இரவு தங்கும் பகுதிக்கு செல்லும் மோடி, அடுத்த நாள் காலை 11 மணியளவில் திருச்சியிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி 11:50 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் தரையிறங்குவார்.
அங்கு பிற்பகல் 12 மணி முதல் 01:30 மணி வரை ராஜேந்திர சோழன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார் மோடி.
அதன் பின்னர் ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் மோடி, 02:30 மணியளவில் விமானத்தில் புறப்பட்டு 05:30 மணியளவில் டெல்லியில் தரையிறங்குவார்.
