அரைசதம் கடந்து விளையாடி வரும் ஜோ ரூட், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களான தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் – 15,921 ரன்கள்
ரிக்கி பாண்டிங் – 13,378 ரன்கள்
ஜோ ரூட் – 13,290* ரன்கள்
ஜாக் காலிஸ் – 13,289 ரன்கள்
ராகுல் டிராவிட் – 13,288 ரன்கள்
