தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டிங் ஒன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், எஸ்.பி.ராஜாராம், சிட்டியூனியன் வங்கி காமக்கோடி மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்களை மீட்டு மறு வாழ்வு அளித்து வருவது குறித்து பலரும் நெகிழ்ந்து பேசியிருக்கின்றனர்.

“எத்தனையோ செயல்களை செய்திருக்கிறோம், திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஆனால் இது போன்ற நபர்களுக்கு செய்கின்ற சிறு உதவி அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. மறு வாழ்வு ஏற்படுகிறது” என மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கின்ற பொழுது தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்தும் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பகிர்ந்துள்ளார். இதை கேட்ட எஸ்.பி.ராஜாராம் உள்ளிட்ட பலரும் நெகிழ்ச்சியடைந்தனர்.
