Last Updated:
உச்சநீதிமன்றம், ரூ. 12 கோடி ஜீவனாம்சம் மற்றும் வீடு கேட்ட பெண்ணிடம், தகுதிவாய்ந்த பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க வேண்டும் என்றும், இடைக்கால பராமரிப்பு கோரக்கூடாது என்றும் தெரிவித்தது.
தகுதிவாய்ந்த பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க வேண்டும் என்றும், தங்கள் கணவர்களிடமிருந்து இடைக்கால பராமரிப்பு கோரக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் ஜீவனாம்ச வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. அந்த ஜீவனாம்ச வழக்கை தாக்கல் செய்த பெண், தனக்கு திருமணமாகி 18 மாதங்களில் கணவனை விட்டு பிரிந்துவிட்டதாகவும், தனது கணவரிடம் இருந்து ரூ. 12 கோடி ஜீவனாம்சமாகவும், மும்பையில் ஒரு வீடும், பி.எம்.டபிள்யூ. காரும் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “நீங்கள் நன்றாக படித்தவர். நீங்கள் சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும். இதை கேட்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “நீங்கள் ஒரு ஐடி நபர். நீங்கள் எம்பிஏ முடித்து இருக்கிறீர்கள். பெங்களூரு, ஹைதராபாத் என உங்களுக்கு தேவைகள் அதிகம். ஏன் நீங்களும் வேலை செய்யக்கூடாது?
உங்களுக்கு திருமணமாகி 18 மாதங்கள் மட்டுமே ஆகிறது. உங்களுக்கு இப்போது BMW தேவைப்படுகிறது? நீங்கள் உயர் கல்வி கற்றவராக இருந்து, உங்கள் சொந்த விருப்பப்படி வேலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்யும்போது, ஒன்று எந்த சுமையும் இல்லாமல் ஒரு பிளாட்டை பெறலாம் அல்லது எதுவுமே பெறாமல் போகலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இதேபோன்ற ஒரு வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் சட்டம் சும்மா இருப்பதை ஊக்குவிக்கவில்லை என்றும், சம்பாதிக்கும் திறன் கொண்ட தகுதிவாய்ந்த பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து இடைக்கால பராமரிப்பு கோரக்கூடாது என்றும் கூறியது என்பது நினைவுகூரத்தக்கது.
July 22, 2025 4:34 PM IST

