Last Updated:
Space Milestone: கடல் பனி, புயல் கண்காணிப்பு, மண் ஈரப்பத மாற்றங்கள், கப்பல் கண்டறிதல், பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் குறித்து பணிகள் மேற்கொள்ளும்.
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள ’நிசார்’ செயற்கைக்கோள், ஜூலை 30ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்வெளி அமைப்புகள் முதன்முறையாக இணைந்து ’Synthetic Aperture Radar’ என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளன. பூமியைப் பற்றிய கண்காணிப்புக்குப் பெரிதும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோள், ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை, முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து, உயர் தெளிவுத்திறன், வானிலை மற்றும் இரவு, பகல் தரவுகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.
கடல் பனி, புயல் கண்காணிப்பு, மண் ஈரப்பத மாற்றங்கள், கப்பல் கண்டறிதல், பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் குறித்து பணிகள் மேற்கொள்ளும். இந்த நிலையில், இஸ்ரோ மற்றும் நாசா ஒத்துழைப்பின் மைல்கல்லாக உருவாகியுள்ள இந்தச் செயற்கைக்கோள், ஜூலை 30ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் விண்ணில் பாயவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோவின் GSLV – F16 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.
July 22, 2025 11:17 AM IST
இஸ்ரோ-நாசா இணைந்து தயாரித்துள்ள ’நிசார்’ செயற்கைக்கோள்.. விண்ணில் ஏவப்படுவது எப்போது தெரியுமா?

