பொருளாதாரம்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், 2014-க்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் நாம் 10-வது இடத்தில் இருந்தோம்.
இன்று, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்.
அதேபோல், 2014-க்கு முன்பு நாட்டில் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.
இன்று, இந்த விகிதம் சுமார் இரண்டு சதவீதமாகக் குறைந்து வருவதால், அது நம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஒரு நிம்மதியாக மாறியுள்ளது.
25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது உலகின் பல நிறுவனங்களால் பாராட்டப்படுகிறது.

நக்சலிசம்
இன்று, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் நமது பாதுகாப்புப் படைகள் முன்னேறி வருகின்றன.
பல மாவட்டங்கள் இன்று நக்சலிசத்திலிருந்து விடுபட்டுள்ளன. “சிவப்பு வழித்தடங்கள்’ எல்லாம் ‘பசுமை வளர்ச்சி மண்டலங்களாக’ மாறி வருகின்றன.
இந்திய அரசியலமைப்பு நக்சலிசத்திற்கு எதிராக வெற்றி பெற்று வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
